பஞ்சாமிர்த வண்ணம்

பஞ்சாமிர்த வண்ணம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த வண்ணம் முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி.

 

பால்

இலங்கு நன்கலை விரிஞ்சனோ
டனந்த னுஞ்சத மகன்சதா
வியன்கொ டம்பியர் களும்பொனா
டுறைந்த புங்கவர் களுங்கெடா

தென்றுங் கொன்றைய ணிந்தோனார்
தந்தண் டின்றிர ளுஞ்சேயா
மென்றன் சொந்தமி னுந்தீதே
தென்றங் கங்கணி கண்டோயா

தேந்து வன்படைவேல் வலிசேர்ந்த திண்புயமே
யேய்ந்த கண்டர்கா றொடை மூஞ்சி கந்தரமோ
டெலும்பு றுந்தலை களுந்து ணிந்திட
வடர்ந்த சண்டைக டொடர்ந்துபே

யெனுங்கு ணுங்குக ணிணங்க ளுண்டரன்
மகன்பு றஞ்சய மெனுஞ்சொலே களமிசையெழுமாறே

துலங்கு மஞ்சிறை யலங்கவே
விளங்க வந்தவொர் சிகண்டியே
துணிந்தி ருந்துயர் கரங்கண்மா
வரங்கண் மிஞ்சிய விரும்புகூர்

துன்றுந் தண்டமொ டம்பீர்வாள்
கொண்டண் டங்களி னின்றூடே
சுண்டும் புங்கம ழிந்தேலா
தஞ்சும் பண்டசு ரன்சூதே

சூழ்ந்தெ ழும்பொழுதே கரம்வாங்கி யொண்டிணிவே
றூண்டி நின்றவனே கிளை யோங்க நின்றுளமா

துவந்து வம்பட வகிர்ந்து வென்றதி
பலம்பொ ருந்திய நிரஞ்சனா
சுகங்கொ ளுந்தவர் வணங்கு மிங்கித
முகந்த சுந்தர வல்ங்க்ருதா அரிபிரமருமேயோ.

அலைந்து சந்தத மறிந்திடா
தெழுந்த செந்தழ லுடம்பினா
ரடங்கி யங்கமு மிறைஞ்சியே
புகழ்ந்த வன்றுமெய் மொழிந்தவா

அங்கிங் கென்பத றுந்தேவா
யெங்குந் துன்றிநி றைந்தோனே
யண்டுந் தொண்டர்வ ருந்தாமே
யின்பந் தந்தரு ளுந்தாளா

ஆம்பி தந்திடுமா மணி பூண்ட வந்தளையா
வாண்ட வன்குமரா வெனை யாண்ட செஞ்சரணா

அலர்ந்த விந்துள வலங்க லுங்கடி
செறிந்த சந்தன சுகந்தமே
யணிந்து குன்றவர் நலம்பொ ருந்திட
வளர்ந்த பந்தனை யெனும் பெணாள் தனையணை மணவாளா

குலுங்கி ரண்டுமு கையுங்களா
ரிருண்ட கொந்தள வொழுங்கும்வேல்
குரங்கு மம்பக மதுஞ்செவா
யதுஞ்ச மைந்துள மடந்தைமார்

கொஞ்சும் புன்றொழி லுங்காலோ
ருஞ்சண் டன்செய லுஞ்சூடே
கொண்டங் கம்பட ருஞ்சீழ்நோ
யண்டந் தந்தம்வி ழும்பாழ்நோய்

கூன்செ யும்பிணிகால் கரம் வீங்க ழுங்கலும்வாய்
கூம்ப ணங்குகணோய் துயர் சார்ந்த புன்கணுமே

குயின்கொ ளுங்கடல் வளைந்த விங்கெனை
யடைந்தி டும்படி யினுஞ்செயேல்
குவிந்து நெஞ்சமு ளணைந்து நின்பத
நினைந்து யும்படி மனஞ்செயே திருவருண் முருகோனே.

தயிர்

கடித்துண ரொன்றிய முகிற்குழ லுங்குளிர்
கலைப்பிறை யென்றிடு நுதற்றில கந்திகழ்
கா சுமையா ளிளமா மகனே
களங்க விந்துவை முனிந்து நன்கது
கடந்து விஞ்சிய முகஞ்சி றந்தொளி
கா லயிலார் விழிமா மருகா விரைசெறி யணி மார்பா.

கனத்துயர் குன்றையு மினைத்துள கும்பக
லசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்
கா தலனான் முகனா டமுதே
கமழ்ந்த குங்கும நாத்த முந்திமிர்
கரும்பெ னுஞ்சொலை யியம்பு குஞ்சரி
கா வலனே குகனே பரனே அமரர்கடொழுபாதா

உடுக்கிடை யின்பணி யடுக்குடை யுங்கன
யுரைப்புயர் மஞ்சுறு பதக்கமொ டம்பத
வோ வியநூ புரமோ திரமே
ருயர்ந்த தண்டொடை களுங்க ரங்களி
லுறும்ப சுந்தொடி களுங்கு யங்களி
லூ ரெழில்வா ரொடுநா சியிலே மினுமணி நகையோடே.

உலப்பறி லம்பக மினுக்கிய செந்திரு
வுருப்பணி யும்பல தரித்தடர் பைந்தினை
யோ வலிலா வரணே செயுமா
றொழுங்கு றும்புன மிருந்து மஞ்சுல
முறைந்த கிஞ்சுக நறுஞ்சொ லென்றிட
வோ லமத யிடுகா னவர்மா மகளெனுமொருமானாம்

மடக்கொடி முன்றலை விருப்புடன் வந்ததி
வனத்துறை குன்றவ ருறுப்பொடு நின்றிள
மா னினியே கனியே யினிநீ
வருந்து மென்றனை யணைந்து சந்தத
மனங்கு ளிர்ந்திட விணங்கி வந்தரு
ளாய் மயிலே குயிலே யெழிலே மடவனநினதேரார்

மடிக்கொரு வந்தன மடிக்கொரு வந்தனம்
வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம்
வா வெனுமோர் மொழியே சொலுநீ
மணங்கி ளர்ந்தந லுடம்பி லங்கிடு
மதங்கி யின்றள மகிழ்ந்தி டும்படி
மான் மகளே யெனையா ணிதியே எனுமொழிபலநூறே.

படித்தவ டன்கைகள் பிடித்துமு னஞ்சொன
படிக்கும ணந்தரு ளளித்தவ னந்தகிர்
பா கரனே வரனே யரனே
படர்ந்த செந்தமிழ் தினஞ்சொ லின்பொடு
பதங்கு ரங்குந ருளந்தெ ளிந்தருள்
பா வகியே சிகியூ ரிறையே திருமலிசமரூரா

பவக்கட லென்பது கடக்கவு நின்றுணை
பலித்திட வும்ழை செறுத்திட வுங்கவி
பா டவுநீ நடமா டவுமே
படர்ந்து தண்டயை நிதஞ்செ யும்படி
பணிந்த வென்றனை நினைத்து வந்தருள்
பா லனனே யெனையாள் சிவனே வளரயின் முருகோனே.

நெய்

வஞ்சஞ்சூ தொன்றும்பேர் துன்பஞ் சங்கட மண்டும்பேர்
மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல்வ ழங்கும்பேர்
மான் கணார் பெணார் தமா லினான்
மதியது கெட்டுத் திரிபவர் தித்திப்
பெனமது துய்த்துச் சுழல்பவ ரிச்சித்தே

மனமுயி ருட்கச் சிதைத்துமே
நுகர்தின துக்கக் குணத்தினோர்
வசையுறு துட்டச் சினத்தினோர்
மடிசொல மெத்தச் சுறுக்குளோர்

வலியே றியகூ ரமுளோ ருதவார்
நடுவே துமிலா ரிழிவார் களவோர்
மணமல ரடியிணை விடுபவர், தமையினு
நணுகிட வெனைவிடு வதுசரி யிலையே தொண்டர்கள் பதிசேராய்

விஞ்சுங்கார் நஞ்சந்தா னுண்டுந் திங்கள ணிந்துங்கால்
வெம்பும்போ தொண்செந்தாள் கொண்டஞ் சஞ்சவுதைந் தும்பூ
மீன் பதா கையோன் மெய்வீ யுமா

விழியை விழித்துக் கடுக வெரித்துக்
கரியை யுரித்துத் தனுமிசை சுற்றிக்கோள்
விழைவறு சுத்தச் சிறப்பினார்
பிணைமழு சத்திக் கரத்தினார்
விஜய வுடுக்கைப் பிடித்துளார்
புரமதெ ரிக்கச் சிரித்துளார்

விதிமா தவனா ரறியா வடிவோ
ரொருபா திபெணா யொளிர்வோர் சுசிநீள்
விடைதனி லிவர்பவர் பணபண மணிபவர்
கனைகழ லொலிதர நடமிடு பவர்சேய் என்றுளகுருநாதா

நஞ்சஞ்சேர் சொந்தஞ்சா லஞ்செம் பங்கய மஞ்சுங்கா
றந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா
தாந் ததீ ததீ ததீ ததீ
ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்
திரிகிட தத்தத் தெயெனந டிக்கச்சூழ்

தனி நடனக்ருத் தியத்தினாண்
மகிடனை வெட்டிச் சிதைத்துளான்
தடமிகு முக்கட் கயத்தினாள்
சுரதனு வக்கப் பகுத்துளாள்

சமிகூ விளமோ டறுகா ரணிவா
ளொருகோ டுடையோ னனைவாய் வருவாள்
சதுமறை களும்வழி படவளர் பவண்மலை
மகளென வொருபெய ருடையவள் சுதனே அண்டர்கடொழுதேவா

பிஞ்சஞ்சூழ் மஞ்சொண்சே யுஞ்சந் தங்கொள்ப தங்கங்கூர்
பிம்பம்போ லங்கஞ்சா ருங்கண் கண்களி லங்குஞ்சீ
ரோங் கவே யுலா வுகால் விணோர்
பிரமனொ டெட்டுக் குலகிரி திக்குக்
கரியொடு துத்திப் படவர வுட்கப்பார்

பிளிற நடத்திக் களித்தவா
கிரிகெட வெக்கித் துளைத்தவா
பிரியக மெத்தத் தரித்தவா
தமியனை நச்சிச் சுளித்தவா

பிணமா முனமே யருள்வா யருள்வாய்
துனியா வையுநீ கடியாய் கடியாய்
பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு
சததமு மறைவறு திருவடி தரவா என்களிமுருகோனே.

சர்க்கரை

மாத முந்தினம் வார முந்திதி
யோக மும்பல நாள்களும் படர்
மாதி ரந்திரி கோள்க ளுங்கழல்
பேணு மன்பர்கள் பான லந்தர

வற்சல மது செயு மருட்குணா
சிறந்த விற்பன ரகக்கணா
மற்புய வசுரரை யொழித்தவா
வனந்த சித்துரு வெடுத்தவா

மால யன்சுரர் கோனு மும்பரெ
லாரும் வந்தன மேபு ரிந்திடு
வான வன்சுடர் வேல வன்குரு
ஞான கந்தபி ரானெ னும்படி

மத்தக மிசைமுடி தரித்தவா
குளிர்ந்த கத்திகை பரித்தவா
மட்டறு மிகலயில் பிடித்தவா
சிவந்த வக்கினி நுதற்கணா சிவகுருவெனுநாதா

நாத விங்கித வேத மும்பல்பு
ராண முங்கலை யாக மங்களு
நாத னுன்றனி வாயில் வந்தன
வேயெ னுந்துணி பேய றிந்தபி

னச்சுவ திவணெது கணித்தையோ
செறிந்த ஷட்பகை கெடுத்துமே
னட்புடை யருளமிழ் துணிற்சதா
சிறந்த துத்தியை யளிக்குமே

நாளு மின்புயர் தேனி னுஞ்சுவை
யீயும் விண்டல மேவ ருஞ்சுரர்
நாடி யுண்டிடு போஜ னந்தினி
லேயும் விஞ்சிடு மேக ரும்பொடு

நட்டமின் முப்பழ முவர்க்குமே
விளைந்த சர்க்கரை கசக்குமே
நற்சுசி முற்றிய பயத்தொடே
கலந்த புத்தமு தினிக்குமோ அதையினியருளாயோ

பூத லந்தனி லேயு நன்குடை
மீத லந்தனி லேயும் வண்டறு
பூம லர்ந்தவு னாத வம்பத
நேய மென்பது வேதி னந்திகழ்

பொற்புறு மழகது கொடுக்குமே
யுயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே
பொய்த்திட வினைகளை யறுக்குமே
மிகுந்த சித்திகள் பெருக்குமே

பூர ணந்தரு மேநி ரம்பெழி
லாத னந்தரு மேய ணிந்திடு
பூட ணந்தரு மேயி கந்தனில்
வாழ்வ துந்தரு மேயு டம்பொடு

பொக்கறு புகழினை யளிக்குமே
பிறந்து செத்திட றொலைக்குமே
புத்தியி லறிவினை விளக்குமே
நிறைந்த முத்தியு மிசைக்குமே இதைநிதமுதவாயோ

சீத ளஞ்சொரி கோதில் பங்கய
மேம லர்ந்திடு வாவி தங்கிய
சீர டர்ந்தவி ராவி னன்குடி
யேர கம்பர பூத ரஞ்சிவ

சித்தரு முனிவரும் வசித்தசோ
லையுந்தி ரைக்கட லடிக்கும்வாய்
செற்கண முலவிடு பொருப்பெலா
மிருந்த ளித்தரு ளயிற்கையா

தேனு றைந்திடு கான கந்தனின்
மானி ளஞ்சுதை யாலி ருஞ்சரை
சேரு டம்புத ளாட வந்தசன்
யாச சுந்தர ரூப வம்பர

சிற்பர வெளிதனி னடிக்குமா
வகண்ட தத்துவ பரத்துவா
செப்பரும் ரகசிய நிலைக்குளே
விளங்கு தற்பர திரித்துவா திருவளர் முருகோனே.

தேன்

சூலதர னாராட வோதிமக ளாடநனி
தொழுபூத கணமாட வரியாட வயனோடு
தூயகலை மாதாட மாநளினி யாடவுயர்
சுரரோடு சுரலோக பதியாட வெலியேறு
சூகைமுக னாராட மூரிமுக னாடவொரு
தொடர்ஞாளி மிசையூரு மழவாட வசுவீர
சூலிபதி தானாட நீலநம னாடநிறை
சுசிநார விறையாட வலிசானி ருதியாட் அரிகரமகனோடே

காலிலியு மேயாட வாழ்நிதிய னாடமிகு
கனஞால மகளாட வரவேணி சசிதேவி
காமமத வேளாட மாமைரதி யாடவவிர்
கதிராட மதியாட மணிநாம வரசோகை
காணுமுனி வோராட மாணறமி னாடவிரு
கழலாட வழகாய தளையாட மணிமாசில்
கான மயி றானாட ஞானவயி லாட வொளிர்
கரவாள மதுவாட வெறிசூல மழுவாட வயிரமலெறுழோடே

கோலவரை ஞாணாட நூன்மரும மாடவிரை
கொளுநீப வணியாட வுடையாட வடனீடு
கோழியய ராதாட வாகுவணி யாடமிளிர்
குழையாட வளையாட வுபயாறு கரமேசில்
கோகநத மாராறொ டாறுவிழி யாடமலர்
குழகாய விதழாட வொளிராறு சிரமோடு
கூறுகலை நாவாட மூரலொளி யாடவலர்
குவடேறு புயமாட மிடறாட மடியாட அகன்முதுகுரமோடே

நாலுமறை யேயாட மேனுதல்க ளாடவிய
னலியாத வெழிலாட வழியாத குணமாட
நாகரிக மேமேவு வேடர்மக ளாடவரு
ணயவானை மகளாட முசுவான முகனாட
நாரதம கானாட வோசைமுனி யாடவிற
னவவீரர் புதராட வொருகாவ டியனாட
ஞானவடி யாராட மாணவர்க ளாடவிதை
நவிறாசனுடனாட விதுவேளை யெணிவாகொள் அருண்மலி முருகோனே.

 

 

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>