சேந்தன் செந்தமிழ்

சேந்தன் செந்தமிழ்:-

இந்நூலில் சுவாமிகள் 5400 சொற்களைச் சான்று கூறி வடமொழித் திரிவும், அழிவும், தென்மொழி வழக்கும், ஒலியளவாக, வடமொழிக்கும், தமிழ் மொழிக்கும், உள்ள பொதுமையையும், பல சொற்கள் வடமொழிச் சொற்கள் என வழக்கில் வந்தவை வடமொழிச் சொற்கள் அல்ல எனவும் நிறுவியுள்ளார்கள்.  

தவத்திரு பாம்பன் சுவாமிகள், ஒருநெறியான மனத்துடன், உண்மை உணர்ந்து வாழ்ந்து வந்த அறவோர். ஆன்ற புலமையினர், அரிய தவப்பயன் எய்திய மெய்யுணர்வாளர். நுண்மாண் நுழைபுலக் கருத்துக்கள் பல அமைந்த நூலும் உரையும் உள்ள அமைப்பு இது வரையில் தமிழ் மொழி வரலாற்றில் இல்லையெனலாம். தமிழ் என்ற சொல்லே தமிளம், திரமிடம், திராவிடம் எனத் திரிந்து வடமொழியில் புகுந்து வழங்கியது.

இந்நூலுக்குச் சுவாமிகளே வரைந்துள்ள முன்னுரையை நோக்குவார்க்குச் சுவாமிகளின் உள்ளக் கிடக்கை ஓரளவு உணர முடியும். அதாவது “50 செய்யுட்கள் வெண்பாக்கள், வடசொற் புகாத தமிழ் சொற்களால் இயற்றப்பட்டவை. வடமொழியும் தமிழ் மொழியும், தனித் தனி மொழிகள். இவை ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றியதன்று. இருமொழிகளும் தனித்தனியே இயங்கக் கூடியவை. இம்மொழிகளில், உயர்வு, தாழ்வு, கூறுதல் கூடாது. இவ்விருமொழிகளும் நம் சொந்த மொழிகளே, இவை நம் இரு கண்கள் போன்றவை. இவைகளில் ஒரு மொழிப் பயன் அறிந்தவர் ஒரு கண் பார்வை மட்டுமே பெற்றவர் போல்வர்.

u1 copyu2 copyu3 copyu4 copyu5 copyu6 copyu7 copyu8 copyu9 copyu10 copy

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>